திட்டமிட்டு சமூக வலைதளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வெளியிட்டால் 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குனர் ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்…
சென்னை டிஜிபி அலுவலகத்தில் நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு பிரத்தியேக பேட்டி அளித்த அவர் நாட்டிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் குறைவாக இருந்து வருவதாகவும் இன்னும் மேலும் செம்மைப் படுத்தும் நோக்கத்தில் தமிழக காவல்துறை சமூக வலைதளங்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பான பாலியல் மற்றும் அது சார்ந்த வீடியோக்களை யாராவது வெளியிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்…
அதேபோன்று தாங்கள் பயன்படுத்தக்கூடிய லேப்டாப் மற்றும் கைபேசி ஆகியவற்றில் ஆபாச படம் வைத்திருப்பதே குற்றம். அதேபோன்று அதனை டவுன்லோட் செய்து தேடி பார்ப்பதும் குற்றம் வேண்டுமென்றே வாட்ஸ்அப் குழுவில் யாராவது அதனைப் பகிர்ந்தால் சம்பந்தப்பட்ட அந்த அட்மின் இடம் விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்…
திட்டமிட்டு உள்நோக்கத்துடன் ஒருவரை கலங்கப்படுத்தும் நோக்கில் வீடியோ பதிவுகளை வெளியிட்டால் 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்படும் அதேபோல பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான போக்சோ சட்டத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்…
Discussion about this post