5 ஆண்டுகளில் 3 முறை எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 3 முறை பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறினார். உரி முகாம் தாக்குதலுக்கு பதிலடியாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாகவும், புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாலகோட் தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். அதேசமயம் 3வதாக நிகழ்த்தப்பட்ட தாக்குதல் குறித்து தான் ஏதும் கூறமாட்டேன் என்று அவர் கூறினார். இந்தியா பலவீனமானது என்று எந்தவொரு நாடும் எண்ணிக்கொள்ள வேண்டாம் என கூறிய அவர், 2028-ல் வலிமையான 3 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Discussion about this post