தமிழகத்தில் தேர்தல் நிறைவு: வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

ஈரோடு மாவட்டத்தில், வாக்குச்சாவடியில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் 63.66 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை தொடங்கிய வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் உள்ள இயந்திரங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து, வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைத்தனர். பவானியில் உள்ள போக்குவரத்து பொறியியல் கல்லூரிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் அனுப்பினர்.

இதேபோல், கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், கோவை வடக்கு கோவை தெற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் வாக்கு செலுத்துவதற்காக வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வைக்கப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு நிறைவுபெற்ற பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் ஆகியவை சீலிடப்பட்டு கோவை அரசு தொழிற்கல்வி மையத்திற்கு எடுத்துவரப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் தனித்தனியாக அறைகளில் வைக்கப்பட்டது. இவற்றுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

சிதம்பரம் மக்களவை தொகுதிக்கான தேர்தல் முடிவடைந்த நிலையில், பதிவான வாக்கு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு என்னும் இடமான தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் கொண்டு வரப்பட்டது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் விஜயலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். விடிய, விடிய 6 சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.

Exit mobile version