சென்னை பெருங்குடியில், விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெருங்குடி கல்லுக்குட்டை பகுதி, சுபாஷ் சந்திரபோஷ் தெருவில் கண்ணப்பன் என்பவர் வீட்டில் உள்ள கிணற்றை தூர் வாரி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. தூர் வாரும் பணியில் அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகன், காளிதாஸ், ராஜு, சேகர் மற்றும் வீட்டின் உரிமையாளர் கண்ணப்பனின் மகன் சந்தோஷ் ஆகிய 5 பேர் ஈடுபட்டனர்.
கிணற்றில் இறங்கிய அன்பழகன், காளிதாஸ், சந்தோஷ் ஆகிய மூவர் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில், ராஜூ, சேகர் ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். வீட்டின் உரிமையாளர் கண்ணப்பனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post