பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தில் கடந்த 5-ம் தேதி பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது முகம்மது தெளஃபீக், முகம்மது பர்வேஸ், தெளஹீத் பாட்சா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களை நேற்று இரவு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி 3 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 3 பேரும் திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Discussion about this post