ஆஸ்திரேலியாவில் தற்போது கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதால் தண்ணீர்க்கு கட்டுப்பாடு விதித்துள்ளது அம் மாநில அரசு. ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு மழை அளவு குறைந்து காணப்பட்டதால் நியூ சவுத் வேல்ஸ், கிரேட்டர் சிட்னி நகரங்களில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, ‘வாகனங்களை கழுவ, இரண்டு பக்கெட் தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும்,’நீச்சல் குளங்களுக்கு தண்ணீர் நிரப்ப, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும்’ என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தண்ணீர் பஞ்சம் அதிக அளவில் உள்ளது.
இங்கு , இவான் பிளைன்ஸ் என்ற இடத்தில், பொது தண்ணீர் தொட்டியிலிருந்து, 3 லட்சம் லிட்டர் தண்ணீரை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். தண்ணீர் திருடியவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
Discussion about this post