திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 10 கோடி மதிப்பிலான 3 தங்க கிரீடங்கள் காணாமல் போனது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ சாமி கோயிலில் உற்சவ மூர்த்திகளான கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தெய்வங்களுக்கு தங்க கிரீடங்கள் அணிவிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், ஆயிரத்து 300 கிராம் எடையுள்ள 3 தங்க கிரீடங்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த தேவஸ்தான உயர் அதிகாரிகள், நடத்திய முதற்கட்ட விசாரணையில், கிரீடங்கள் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், எஸ்.பி. அன்புராஜன் தலைமையில் கோயில் அர்ச்சர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், திருப்பதி குற்றத்தடுப்பு காவல் நிலைய டிஎஸ்பி தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post