ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி நல்லூர் அருகே தஞ்சமடைந்துள்ள 3 காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. நேற்றிரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய 3 காட்டு யானைகள், குரும்பபாளையம் கிராமத்திற்குள் நுழைந்து அங்கிருந்த வாழைத் தோட்டத்தை சேதப்படுத்தின.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் யானைகள், வனப்பகுதிக்குள் செல்லாமல் நல்லூர் கிராமத்தையொட்டியுள்ள முட்புதர் காட்டில் தஞ்சமடைந்தன.
இதையடுத்து அந்தப்பகுதியில் முகாமிட்டுள்ள வனத்துறையினர், யானைகளை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டுவது குறித்து ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே,யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Discussion about this post