கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மேலும் ஆயிரத்து 239 மருத்துவர்கள் உட்பட 2 ஆயிரத்து 834 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்கனவே, சுகாதாரத்துறை மூலம், 530 மருத்துவர்கள், 4 ஆயிரத்து 893 செவிலியர்கள், ஆயிரத்து 508 ஆய்வக நுட்புனர்கள் மற்றும் 2 ஆயிரத்து 715 சுகாதார ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டில் முதுநிலை மருத்துவப் படிப்பு முடித்த 574 பேரை, 75 ஆயிரம் ரூபாய் மாத ஊதியத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய கூடுதலாக நியமிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், 60 ஆயிரம் ரூபாய் மாத ஊதியத்தில் 665 மருத்துவர்களையும், 15 ஆயிரம் ரூபாய் மாத ஊதியதில் 365 ஆய்வக உதவியாளர்களையும், 12 ஆயிரம் ரூபாய் மாத ஊதியத்தில் ஆயிரத்து 230 பல்நோக்கு சுகாதார பணியாளர்களையும் பணி நியமனம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவர்கள், 3 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், சுகாதாரத்துறை மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு பணியில் இணைந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
Discussion about this post