தொழிலதிபர் என்று கூறி தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி விட்டு, 26 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை எழும்பூர் போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் மனைவி சின்னத்தாய் மற்றும் இரண்டு பெண்களோடு, சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கினார். விடுதி கட்டணத்தை முதலில் ஒழுங்காக செலுத்திய அவர், பின்னர் 26 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஓட்டல் மேலாளர் முத்துக்குமார், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், விசாரணை நடத்திய போலீசார் சக்திவேலை கைது செய்தனர்.
Discussion about this post