மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அம்மா இருசக்கர வாகனத்துக்கு 25 சதவீதம், கூடுதல் மானியம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
தமிழக அரசு, பணிக்கு செல்லும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி இருசக்கர வாகன விலையில் 50 சதவீதம் அல்லது 25,000 மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கான மானியம் 25%கூடுதலாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் ஊரகவளர்ச்சித்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார்.