சம்பள பாக்கி காரணமாக பைலட்டுகள் வேலைக்கு வராததால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 25 விமானங்கள் ரத்து செய்யபட்டுள்ளன.
ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் நஷ்டத்தில் இயக்கி வருவதால் பண நெருக்கடியில் சிக்கியுள்ளது. விமான பைலட்டுகளுக்கு கூட சரி வர ஊதியம் வழங்கவில்லை. ஆள் பற்றாக்குறையால் அதிக நேரம் வேலை பார்க்க பைலட்டுகள் பணிக்கப்படுகிறார்கள். விமான போக்குவரத்து ஆணையத்துக்கு செலுத்த வேண்டிய தொகையை அளிக்கவும் கால அவகாசம் கோரியுள்ளது.
இந்நிலையில் ஊதியப் பிரச்னையால் பல பைலட்டுகள் மொத்தமாக விடுப்பு எடுத்ததால், 25 விமானங்களை ஜெட் ஏர்வேஸ் இன்று ரத்து செய்துள்ளது.