சென்னையில் நடைபெற்று வரும் ஆடை கண்காட்சியில் நவீன கால ஆடைகள் இடம்பெற்றுள்ளன. நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அப்பர் லியே அசோசியேஷன் சார்பில் 24 ஆம் ஆண்டு சம்மர் பேஷன் பெஸ்டிவல் 2023 கண்காட்சி நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில் நவீனகால ஆடைகள், கலாச்சார ஆடைகள், விளையாட்டு உள்ளிட்ட ஆடைகள் என பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 250 க்கும் மேற்பட்ட பல்வேறு முன்ணனி உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் சேகரிப்பைக் காட்சிபடுத்தியுள்ளனர். மேலும் ஆடை உற்பத்தியாளர்கள் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தகர்களை இணைக்கும் வகையில் ஆடை கண்காட்சி அமைந்திருப்பதாக கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post