திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடமாடும் பழுது நீக்கி வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்க கூடிய கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. நாள்தோறும் கேரளா, ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த வாகனங்களில் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், மலைப்பகுதிகளில் செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பழுதடைந்தால், அதை சம்பவ இடத்திற்கு சென்று சரி செய்ய நடமாடும் பழுதி நீக்கி வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Discussion about this post