திருச்சியில் 24 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்புக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் கொரோன தொற்று பாதிப்பு குறித்து இதுவரை சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 27 ஆயிரத்து 740 பேருக்கு நோய் தொற்று உறுதியானதில் 23 ஆயிரத்து 484 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். மேலும் இதுவரை 246 பேர் பலியாகியுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 8 ஆயிரத்து 20 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 784 பேருக்கு கொரோன தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் 6 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
திருச்சி மாநகரில் கோபி-அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், பொன்மலை, அரியமங்கலம் உள்ளிட்ட நான்கு கோட்டங்களில் 24 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதில் அதிக அளவாக கோ-அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட தில்லைநகர், திருச்சி அரசு மருத்துவமனை சுற்றுவட்டார பகுதி, ராமலிங்க நகர், ஸ்ரீனிவாச நகர் உள்ளிட்ட 22 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post