குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக 23 இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், முன்னாள் எம்.பி.யும், அதிமுக மாநில சிறுபான்மை பிரிவு செயலாளருமான அன்வர் ராஜா ஆகியோர் தலைமையில் இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர்கள் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்திற்கு சென்றனர். அங்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக அவர்கள் கோரிக்கை மனுவை வழங்கினர். அதில், குடியுரிமை திருத்த சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
Discussion about this post