உத்திர பிரதேச மாநிலத்தில் விஷ சாராயம் குடித்து 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் பல இடங்களில் சட்ட விரோதமாக கள்ளச் சாராயம் விற்கப்படுகிறது. இந்த நிலையில் குஷிநகர் மற்றும் சகாரன்பூர் மாவட்டங்களில் விற்கப்பட்ட சாராயத்தை ஏராளமானோர் வாங்கி குடித்தனர். அவர்களில் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர்களில் 21 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மேலும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைப்போல உத்தரகாண்டின் ஹரித்வார் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்லுபுர் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பரிமாறப் பட்ட சாராயத்தை குடித்த 11 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.இங்கும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Discussion about this post