"2022 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு"

நாட்டின் ஜிடிபி 8 சதவீதமாக உள்ளதாகவும், 10 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சயீப் மசூதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.   அப்போது பேசிய அவர், தொழில்நுட்பம் நம்மை ஒற்றுமைப்படுத்தும் சக்தியாக திகழ்வதாக கூறினார். 

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் நாட்டில் 90 சதவீத வீடுகளில் கழிப்பறைகள் உள்ளதாக கூறிய அவர், தூய்மை இந்தியா திட்டத்தை மக்கள் முன்னெடுத்துச் செல்வதாக அவர் கூறினார். முதல் முறையாக இந்தியாவில் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாக பாஜக உள்ளதாகவும், ஆயுஸ்மான் பாரத் திட்டம், 50 கோடி மக்களுக்கும் உயிர்காக்கும் கருவியாக உள்ளதாக மோடி கூறினார்.

2022-க்குள் அனைவருக்கும் வீடு என்பது அரசின் இலக்காக உள்ளதாகவும், தற்போது வரை 1 கோடி பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்போது தெரிவித்தார். கடந்த காலாண்டில் ஜிடிபி 8 சதவீதமாக உள்ளதாகவும், இதனை 10 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

Exit mobile version