பிரபல இருசக்கர வாகன நிறுவனமான கவாஸ்கி அடுத்ததாக 2020 Kawasaki Ninja ZX-10R என்ற மாடல் பைக்கில் சில மாற்றங்களுடன் வாகன சந்தையில் களமிறக்க உள்ளது. அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் உருவான 2020 Kawasaki Ninja ZX-10R பைக்குகளில் தற்சமயம் பல இடங்களில் பைக்கின் அழகை மெருகூட்டும் வகையில் தங்க நிற ஹைலட்டர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு 2020 Kawasaki Ninja ZX-10R என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படுகிறது, இதனால் 2020 Kawasaki Ninja ZX-10R மாடலின் தோற்றம் மேலும் அழகாக காணப்படுகிறது. மேலும் பைக்கின் கால் வைக்கும் பகுதியில் சிவப்பு நிற வண்ணமும் கொடுக்கப்பட்டுள்ளது. ரூ. 1.39 லட்சம் 2020 Kawasaki Ninja ZX-10R பைக்கின் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 2019 Kawasaki Ninja ZX-10R மாடலில் இருந்த அதே சிறப்பம்சங்களுடனே இதிலும் உள்ளது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ், 998 சிசி 4 சிலிண்டர்களுடன் எஞ்சின் , 6 ஆக்ஸிஸ் ஐஎம்யு என சில நவீன அப்டேட்டுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த 2020 Kawasaki Ninja ZX-10R மாடல் பைக் இந்தியாவில் உள்ள மற்ற லிட்டர் கிளாஸ் பைக்குகளுக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அறிமுகமான பைக்குகளில் கவாஸ்கி நிறுவன பைக்குகள் மட்டுமே எரிபொருள் சிக்கனத்துடன் வடிவமைக்கப்படுவதால் பைக் பிரியர்கள் இதன் வரவை எதிர்நோக்கி காத்துள்ளனர்.
Discussion about this post