தமிழக அரசின் 2019-20 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை வரும் 8-ம் தேதி துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
இதுகுறித்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வரும் 8-ம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். இதில் பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்று முடிவு செய்யப்படும்.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், மக்களுக்கு நலம் பயக்கும் புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post