2017ஆம் ஆண்டில் 50 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்காவில் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் குடியுரிமை தொடர்பான அறிக்கையில், 2017ஆம் ஆண்டு 50 ஆயிரத்து 802 இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை அளிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2016ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 4 ஆயிரம் அதிகமாகும். அதேசமயம் 2015ஆம் ஆண்டு 42 ஆயிரத்து 213 இந்தியர்களுக்கு மட்டுமே அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது புதிதாக குடியுரிமை பெற்ற இந்தியர்களில் 12 ஆயிரம் பேர் கலிபோர்னியாவில் குடியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post