ராமநாதபுரம் மாவட்டம் மஞ்சங்குளம் கிராமத்தில் நயினார் கோயில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மழை வேண்டியும் உலக நன்மைக்காகவும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்து 8 பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதைதொடர்ந்து, மகாவிஷ்ணுவின் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Discussion about this post