கொரோனா தொற்று பூஜ்யம் என வந்தால்தான், அம்மா மினி கிளினிக் திறக்கப்படும் என்ற சுகாதாரத்துறை அமைச்சர் கருத்துக்கு, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஏழை, எளிய மக்களின் தேவைக்காக அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அம்மா மினி கிளினிக்குகளை தொடங்கி வைத்தார். காலை 4 மணி நேரமும், மாலை 4 மணி நேரமும் பொதுமக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்துவந்த அம்மா மினி கிளினிக்குகள், திமுக ஆட்சிக்கு வந்த உடன் மூடப்பட்டன.
மீண்டும் அம்மா மினி கிளினிக்குகள் எப்போது திறக்கப்படும் என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், கொரோனா தொற்று பூஜ்யம் என வரும்போது திறக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் அதிர்ச்சியூட்டும் பதில் அளித்தார். சிறு சிறு பிரச்னைகளுக்கு மருந்தகங்களுக்கோ அல்லது தனியார் கிளினிக்குகளுக்கு சென்று செலவழிக்கக் கூடிய நிலையை மாற்றிய அம்மா மினி கிளினிக்குகளை மூடி வைத்திருப்பது, வேதனை அளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
Discussion about this post