டெல்லியில் 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோர் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டார். வீடுகளில் 201 முதல் 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்றும் கெஜ்ரிவால் கூறினார்.
இதேபோல், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், காற்று மாசை தடுக்கவும் மெட்ரோ ரயிலில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டத்தையும் டெல்லி அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டமும் விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் பாணியை பின்பற்றி டெல்லி அரசும் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post