வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவை ஒட்டி, 25ம் தேதி முதல் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா தொடங்க உள்ளது. இதையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக சென்னை, பெங்களூரு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம் மற்றும் கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, அதிநவீன வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் உள்ளிட்ட 200 சிறப்பு பேருந்துகள் 25ம் தேதி முதல் அடுத்த மாதம் 10 ம் தேதி வரை சுமார் 16 நாட்களுக்கு இயக்கப்படும். பயணிகள் வசதிக்காக இணையதளத்தின் மூலமாக முன் பதிவு செய்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
Discussion about this post