ஈரோட்டில் 200 கிலோ எடையுள்ள தடை செய்யபட்ட குட்கா பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு அடுத்த வீரப்பன் சத்திரம் பகுதியில் பரமேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை அருகே உள்ள குடோனில் தமிழக அரசால் தடை செய்யபட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கலைவாணி தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில் தடை செய்யபட்ட சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான 200 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சேலம் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட குட்கா பொருட்கள் அங்கு பதுக்கி வைத்து, விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுக்காப்பு துறை அதிகாரிகள், நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.