உதகை மண்டலத்திற்கு 20 புதிய பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உதகை மண்டலத்திற்கு 5 கோடியே 40 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட 20 புதிய பேருந்துகளின் சேவைகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, நாடாளுமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் மற்றும் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

இதேபோல், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாகையில் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்ட 15 புதிய பேருந்துகளை கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதேபோல், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திண்டுக்கல் மண்டலத்திற்கு வழங்கப்பட்ட 23 புதிய பேருந்துகளை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல், காஞ்சிபுரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட புதிய பேருந்து சேவைகளை ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version