இந்தியாவில் செயல்படும் 20 போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாக பல்கலைக்கழ மானிய குழு அறிவித்துள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் மாநில வாரியாக செயல்படும் போலி பல்கலைக்கழகங்களில் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி , டெல்லியில் அதிகபட்சமாக 8 போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக உத்தர பிரதேச மாநிலத்தில் நான்கு போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுகிறது.
மேற்குவங்கம், ஆந்திர பிரதேசத்தில் தலா 2 போலி பல்கலைக்கழகங்களும் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஆகிய மாநிலங்களில் தல ஒரு போலி பல்கலைக்கழகங்களும் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை எந்த போலிப் பல்கலைக்கழகங்களும் செயல்படவில்லை என்றும், புதுச்சேரியில் ஸ்ரீ போதி அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன் என்கிற பெயரில் ஒரு போலி பல்கலை கழகம் செயல்படுவதாக யுஜிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.