கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு 2 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்படும்: ஆந்திர முதல்வர்

கோடைக்காலத்தில் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் பெறுவதற்காக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை,  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து பேசினர்.

சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆண்டுதோறும் கிருஷ்ணா நதியில் இருந்து 12 டிஎம்சி தண்ணீரை வழங்க ஒப்பந்தம் ஏற்கெனவே கையெழுத்தான நிலையில், இதில் இருந்து 3 டிஎம்சி நீரை கோடைக்கால குடிநீர் தேவைக்காக வழங்குமாறு தமிழக அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 2 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறக்க ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஒப்புதல் அளித்துள்ளார்.

Exit mobile version