கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்க அசித்ரோமைசின் மற்றும் குளோரோகுயின் ஆகிய இரண்டு மருந்துகளை பயன்படுத்தலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலக முழுவதும் கொரோனா வைரஸிற்கு தீர்வு காணும் வகையில், மருந்து கண்டுபிடிக்கும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இரண்டு மருந்துகள் பயன் அளிக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பக்கத்தில், மருந்துகள் குறித்து தகவல் ஒன்றை டிரம்ப் வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்க அசித்ரோமைசின் மற்றும் குளோரோகுயின் ஆகிய இரண்டு மருந்துகளை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த மருந்துகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Discussion about this post