தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகிறது.
தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்துக்கு 88 ஆயிரம் மாணவர்கள் எழுதும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியது. பிரச்சனைக்குரிய தேர்வு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்றுடன் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் நிறைவடைகின்றன. இறுதி நாளான இன்று, உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்குப் பதிவியல் மற்று கணக்குத் தணிக்கை பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது.
விடைத்தாள்களை திருத்தும் பணி வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இந்தப் பணியில் 40 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.
Discussion about this post