மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செல்போன் பாதுகாப்பு கட்டணம் மூலம் ரூபாய் 2 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் யாரும், செல்போனை உள்ளே கொண்டு செல்லக் கூடாது என்று உயர்நீதிமன்றம், கடந்த மார்ச் மாதம் தடை விதித்திருந்தது. கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதை தவிர்க்கும் வகையில், 5 கோபுர வாயில்களிலும், செல்போன் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டு, ஒரு செல்போனுக்கு 10 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், செல்போன் கட்டணம் மூலம் வசூல் செய்யப்பட்ட தொகை குறித்து, சமூக ஆர்வலர் மோகன்குமார் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேள்வி கேட்டிருந்த நிலையில், கடந்த 10 மாதங்களில் ஒரு கோடியே 99 லட்சத்து 10 ரூபாய் வசூலிக்கப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post