கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு 2 கோடி முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உதவும் வகையில் தேவையான உபகரணங்கள், மருந்து, மாத்திரைகளை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இதன்படி கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 2 கோடியே 2 லட்சம் N95 ரக முகக்கவசங்களும், ஒரு கோடியே 18 லட்சம் பிபிஇ கிட் எனப்படும் முழு உடல்கவசமும் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 6 கோடியே 12 லட்சம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 11 ஆயிரத்து 300 வென்டிலேட்டர்களையும் மத்திய அரசு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post