கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் மேலும் உயிரிழப்பு.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையை சேதம் செய்ததால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் பலி எண்ணிக்கை அதிகரிப்பதால் மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.கர்நாடக மாநிலத்தில் கொரனோ பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் சாம்ராஜ்நகர் மாவட்டம் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் மூச்சுத்திணறல் காரணமாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு படுக்கை வசதி இல்லாத காரணத்தால் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து இருந்த சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதம் செய்தனர். இதன் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் இன்று காலை சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மூச்சுத்திணறல் காரணமாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளார்.
அவருக்கும் படுக்கை வசதி கிடைக்காததால் மருத்துவமனை வளாகத்திலேயே உயிரிழந்தார். சாம்ராஜ் நகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆக்சிசன் பற்றாக்குறையாலும், படுக்கை வசதி இல்லாததாலும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாவட்ட மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
Discussion about this post