நாடாளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகிறது.
ஒரு கட்சி, தேசிய கட்சி அந்தஸ்தை பெறுவதற்கு 3 அடிப்படை அம்சங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. தேசிய அந்தஸ்து பெற்ற ஒரு கட்சி, தேர்தலில் 11 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.நான்கு மாநிலங்களில் இருந்து 4 இடங்களை கைப்பற்றுவதுடன், 6 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும். நான்கு மாநிலங்களில் மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும், மேலும் 8 சதவீத ஓட்டுகளையும் பெற்றிருக்க வேண்டும். ஆனால் தற்போது கேரளாவில் ஒரு தொகுதியிலும், தமிழ்நாட்டில் 4 தொகுதிகள் என மொத்தம் 5 இடங்களில்தான் கம்யூனிஸ்டு கட்சிகள் வெற்றிப் பெற்றுள்ளன. எனவே இந்த அடிப்படை அம்சங்களை பூர்த்தி செய்யாத நிலையில், 2 கம்யூனிஸ்டுகளும் தேசிய கட்சி அந்தஸ்தை பறிகொடுக்கிற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
Discussion about this post