தமிழகத்தின் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாநில அரசு நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
வரும் மே மாதம் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.அதே போல், தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்தான பணிகளை திறன்பட செயல்படுத்த 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி,மருத்துவப் பணிகள் தேர்வாணையத்தில் தலைவராக செயல்பட்ட ராஜாராமனும், பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளராக பணியாற்றிய பாலாஜியும், இப்பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர் என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பணிக்காலம் ஓராண்டு என்பது குறிப்பிடத்தக்கது.