அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2 புள்ளி 77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2புள்ளி 77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினர் நிர்வாகம் செய்யலாம் என அலகாபாத் நீதிமன்றம் 2010 ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினை எதிர்த்து 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் , நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, டி.ஒய் . சந்திர சூட், அஷோக் பூஷண், எஸ்.ஏ நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரனைக்கு வருகிறது.
இதனிடையே ராமர் பிறந்த இடத்தில் வழிபடுவது அடிப்படை உரிமை என்றும் அங்கு வழிபட அனுமதி வழங்க வேண்டும் எனவும் பாஜக தலைவர் சுப்ரமணியசாமி தொடுத்த வழக்கு மீதும் இன்று பரிசீலினை நடைபெறுகிறது.
Discussion about this post