2.0 திரைப்படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது
2.0 திரைப்படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொதுவாக ரஜினி நடிக்கும் படங்களுக்கு சிக்கல் வராது. ஆனால் கமல்ஹாசன் மற்றும் விஜய் படங்களுக்கு அதிகம் சிக்கல்கள் வரும். அதற்கு விதிவிலக்காக இப்போது ரஜினியின் 2.0 திரைப்படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. லைக்கா புரடொக்ச்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் நாளை வெளியாக உள்ள திரைப்படம் 2.0. இத்திரைப்படம் செல்போன்கள் மற்றும் செல்போன் கோபுரங்களினால் ஏற்படும் விளைவுகள் குறித்து பேசும் படமாக இருக்கும் எனத் தெரிகிறது.
இப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், செல்போன்கள் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் என்றும், இந்திய செல்போன் ஆபரேட்டர்கள் சங்கத்தின் சார்பில் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்துக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post