18 எம்எல்ஏக்கள் பதவி பறிபோக காரணமாக இருந்த தினகரன் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூரில், அதிமுகவின் 47- ம் ஆண்டு துவக்க விழா பொது கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், திமுக ஒரு குடும்ப கட்சி என்றும், குடும்ப அரசியலை ஒழிக்கவே எம்ஜிஆரால் தொடங்கப்பட்டது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்றும் தெரிவித்தார். அதிமுக-வை அழிக்க ஸ்டாலின், தினகரன் என யார் நினைத்தாலும் முடியாது என்று கூறிய அமைச்சர் காமராஜ், 18 எம்எல்ஏக்கள் பதவி பறிபோக காரணமான தினகரன் தார்மீக பொறுப்பேற்று ஆர்.கே நகர் சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Discussion about this post