18 எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட தீர்ப்பு உறுதி செய்யப்பட்டதற்கு, அந்த தொகுதிகளை சேர்ந்த மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க சின்னத்தில் போட்டியிட்டு அந்த கட்சியின் தலைமைக்கே எதிராக செயல்பட்டதால், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அதனை ஏற்று அந்த தொகுதிகளில் தேர்தல் நடத்த வழிவகை செய்யாமல், 18 பேர் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனால் அந்த தொகுதி மக்களுக்கு, சட்டமன்ற உறுப்பினர் மூலம் சென்றடைய வேண்டிய திட்டங்கள் சென்று சேராமல் முடங்கின. இதனால் 18 பேர் மீதும் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வென்ற செந்தில் பாலாஜி, தங்களது தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என குமுறியுள்ள மக்கள், அடுத்த முறை அவர் போட்டியிட்டால், வாக்களிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
Discussion about this post