யுரேனஸ் கோளானாது 1781 ஆம் ஆண்டு வில்லியம் ஹெர்சல் எனும் வானியல் ஆர்வலரால் இன்றைய தினத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் ஒரு ஜெர்மானிய ஆங்கிலேயர் ஆவார். இந்தக் கோளினை தொலைநோக்கியின் வாயிலாகதான் கண்டறிந்துள்ளார், முதலில் அவர் இக்கோளினை சாதாரண நட்சத்திரம் அல்லது வால்நட்சத்திரமாக இருக்கும் என்று நினைத்திருந்தார். இதனை கண்டறிந்ததும் இங்கிலாந்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னின் பெயரை இக்கோளிற்கு வைக்க எண்ணினார். ஆனால் பின் வந்த வானியலாளர்கள் கிரேக்கத்தின் வானத்தின் கடவுளை பெயராக சூட்டி யுரேனஸ் என்று அழைத்தனர்.
Discussion about this post