வங்கிகளில் மேலும் ஒரு நிறுவனம் 1700 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக சி பி ஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
தொலைத்தொடர்பு சாதனங்களை தயாரித்து வரும் ஹைதராபாத்தை சேர்ந்த வி.எம்.சி நிறுவனத்தின் மீது பஞ்சாப் நேஷனல் வங்கியின் சார்பில் 593 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதே போல பாரத ஸ்டேட் வங்கி, கார்ப்ரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி மற்றும் ஜே.எம் நிதி நிறுவனம் ஆகிய வங்கிகளிடம் இருந்து ஆயிரத்து 207 கோடி ரூபாய் கடன் பெற்று, அந்த கடனை திருப்பி செலுத்த வில்லை எனவும் வி.எம்.சி நிறுவனத்தின் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
வி.எம்.சி நிறுவனத்தின் இயக்குனர்களான உப்பலப்பட்டி ஹிமா பிந்து, உப்பலப்பட்டி வெங்கட் ராமராவ், பாக்வாடுலா வெங்கட் ரமணா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ, அவர்களின் மற்றும் வீடு அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
Discussion about this post