சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் 17வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ஜுஸ் கடை காரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகர் 4 வது தெருவைச் சேர்ந்த அகமது பாஷா. இவரது மனைவி ரகுமது நிஷா கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிர்ழந்தார். இவர்களது 17 வயதுடைய மகள் ரபியா பத்தாம் வகுப்பு படித்து முடித்து
விட்டு வீட்டில் இருந்துள்ளார். தந்தை வேலைக்கு சென்று விடவே சிறுமி மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அருகில் ஜுஸ் கடை வைத்திருக்கும் முகமது அலி , சிறுமி தனியாக இருப்பதை பார்த்து, அடிக்கடி அவரிடம் ஆசை வார்த்தை கூறி பேசி பழகி வந்துள்ளார். நாளடைவில் சிறுமி கேட்பதை வாங்கிக்கொடுத்து, நெருக்கமாக இருந்துள்ளார்.
இந்நிலையில், சிறுமி அடிக்கடி வயிற்று வலி என்று தந்தையிடம் கூறி வந்துள்ளார். சிறுமிக்கு உடலில் மாற்றம் ஏற்பட்டுவருவதை அறிந்த தந்தை சிறுமியை இராயபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சிறுமியின் அக்கா சாகீரா பர்வீன் காவல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் குற்றவாளி முகமது அலியை கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர்.
Discussion about this post