மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே கோந்த்வா என்ற இடத்தில் 30 அடி உயர சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
புனேவில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழையால் கோந்த்வா என்ற இடத்தில் அடுக்குமாடி கட்டிடம் அருகே எழுப்பப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்தது. இதில், 9 ஆண்கள், ஒரு பெண் மற்றும் 4 குழந்தைகள் உட்பட 15 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், இருவர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
இடிந்து விழுந்த சுவற்றுக்குள் இரண்டு அல்லது மூன்று பேர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவம் நடந்த இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Discussion about this post