உலகம் முழுதும் 160 நாடுகளில் Global Climate Strike பேரணி நடைபெற்றது.
கடந்த 2015ஆம் ஆண்டு Global Climate Strike போராட்டம் முதன்முதலில் தொடங்கியது. இந்த ஆண்டும் செப்டம்பர் 20 முதல் 27வரை இந்தப் பேரணி நடைபெறுகிறது. நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளின் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதன்படி, உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றான இந்தியாவின் புதுதில்லியில், வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்கு வெளியே நடந்த பேரணியில் மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் “காலநிலை நடவடிக்கை வேண்டும்” என்றும் “சுத்தமான காற்றை சுவாசிக்க விரும்புவதாகவும் முழக்கங்களை எழுப்பினர். நாடு முழுவதும் 110 நகரங்களில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. 2030க்குள், நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை இலக்காகக் கொள்ளுமாறு அரசிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post