காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் அளவு அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16, 239 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16 ஆயிரத்து 239 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 118 புள்ளி 60 அடியாகவும், நீர் இருப்பு 91 புள்ளி 255 டி.எம்.சியாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 500 கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 350 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்தைக் காட்டிலும் நீர் திறப்பு குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டமும், நீர் இருப்பும் அதிகரித்து வருகிறது.
Discussion about this post