குமரி மாவட்டத்தில் தொடர்ந்து நிலவிவரும் கடல் சீற்றத்தால் வல்லவிளையில் 15 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
கேரளாவில் துவங்கியுள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக குமரியில் கடந்த 5 தினங்களாக கடல் சீற்றம் காணப்படுகிறது. இதையடுத்து, நீரோடியில் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக கடல் அலைகள் 20 அடிக்கு மேல் ஆக்ரோஷமாக எழுவதால், வல்லவிளையில் செயின்ட் மேரிஸ் தேவாலயம் மற்றும் 15க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல்நீர் புகுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உரிய நிவாரணம் வழங்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post