தமிழகத்தில் தொடர் மழையால் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் 15 அணைகள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமக தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் 15 அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள 2 ஆயிரத்து 144 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியன.
அதன் படி, 93 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர் இருப்பு 93 டி.எம்.சியாகவும், 32 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர் இருப்பு 32 டி.எம்.சியாகவும் உள்ளது. 5 புள்ளி 5 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர் இருப்பு 5 புள்ளி 4 டி.எம்.சியாகவும், 3 புள்ளி 8 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையின் நீர் இருப்பு 3 புள்ளி 8 டி.எம்.சியாகவும் உள்ளது.
அதேபோல், 4 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையின் நீர் இருப்பு 2 டி.எம்.சியாகவும், 10 புள்ளி 5 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட முல்லைப் பெரியாறு அணையின் நீர் இருப்பு 4 புள்ளி 2 டி.எம்.சியாக உள்ளது.
6 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட வைகை அணையின் நீர் இருப்பு 4 புள்ளி 4 டி.எம்.சியாகவும், 5 புள்ளி 5 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர் இருப்பு 3 புள்ளி 1 டி.எம்.சியாக உள்ளது.
4 புள்ளி 3 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர் இருப்பு 3 புள்ளி 9 டி.எம்.சியாகவும், 2 புள்ளி 8 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர் இருப்பு 2 புள்ளி 3 டி.எம்.சியாக உள்ளது.
1 புள்ளி 6 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணகிரி அணையின் நீர் இருப்பு பூஜ்யம் புள்ளி 6 டி.எ.சியாகவும், 7 புள்ளி 3 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட சாத்தனூர் அணையின் நீர் இருப்பு 2 புள்ளி 9 டி.எம்.சியாக உள்ளது. 5 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர் இருப்பு 4 புள்ளி 7 டி.எம்.சியாகவும், 13 புள்ளி 4 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட பரம்பிகுளம் அணையின் நீர் இருப்பு 12 புள்ளி 9 டி.எம்.சியாக உள்ளது. 1 புள்ளி 7 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட திருமூர்த்தி அணையின் நீர் இருப்பு 1 புள்ளி 2 டி.எம்.சியாக உள்ளது.
சென்னையின் நீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.
Discussion about this post