மதுரை உரிய ஆவணங்கள் இன்றி வேனில் கொண்டு செல்லப்பட்ட 15 கோடி மதிப்பிலான 47 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மக்களவை தேர்தலையொட்டி, பணப் பட்டுவாடாவை தவிர்க்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், அய்யர் பங்களா பகுதியில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது ஒரு வாகனத்தில் 47 கிலோ தங்கம் எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இன்றி இந்த தங்கம் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மதுரையில் இருந்து சேலத்திற்கு இவற்றை கொண்டு செல்வதாக வாகனத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, 47 கிலோ தங்கம், பறிமுதல் செய்யப்பட்டது.
Discussion about this post