எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்குமேல் உள்ள கைதிகள் இதுவரை ஆயிரத்து 457 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறையில் 10 ஆண்டுகளுக்குமேல் இருக்கும் கைதிகள் விடுவிக்கப்படுவதாக, திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி ஆயிரத்து 775 கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது.
இதுகுறித்த அரசாணை கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. விடுதலைக்கு தகுதியான நபர்கள் குறித்த பட்டியலை, சிறைத்துறை ஏடிஜிபி, தமிழக அரசுக்கு அனுப்பியிருந்தார். அதன்படி 10 ஆண்டுகளுக்குமேல் சிறையில் இருக்கும் கைதிகளை தமிழக அரசு விடுவித்து வருகிறது.
இதுவரை, தமிழக சிறைகளில் இருந்து ஆயிரத்து 457 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள கைதிகள் இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post